வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/08/2016

ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக  பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது. சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கும் என்றார். 

நோய் வந்தால் மருத்துவரை நாடிச் செல்கிறோம். தாவாவை தீர்க்க வேண்டும் என்றால் வழக்கறிஞர்களை தேடிஅவர்களின் உதவியை நாடிச் செல்லுகிறோம். ஆனால்நோயை போக்க வழகறிஞர்களை நாடி யாரும் செல்லக் கூடாது. செல்லவும் மாட்டார்கள். தாவாவை தீர்க்க மருத்துவரை நாடி யாரும் போகமாட்டார்கள். ஆனால்இன்றைக்கு நிலை எப்படி இருக்கிறது என்று சொன்னால்இன்றைக்கு ஒரு கொடுமையான நிலையில் சிக்கிஒரு கொடுமையான கல்விக் கொள்கையை புகுத்தக் கூடிய நிலையில் மத்திய அரசு இன்று ஈடுபட்டிருக்கிறது. ஆகவே அதை எதிர்க்கக் கூடிய வகையிலேதான்திராவிடர் கழகம்,அதன் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்றுதலைமையேற்றுஇந்த போராட்டத்தை நடத்த முன் வந்திருக்கிறார். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகமும்திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள்சாட்சிகள்சான்றுகள் உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்த போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.
 
மத்திய அரசு ஒரு ஆபத்தான புதிய கல்வி கொள்கையை வகுக்க திட்டமிட்டிருக்கிறது. அப்படி திட்டமிட்டிருக்கக் கூடிய அந்த கொள்கையில்,அதனுடைய வரைவினுடைய முகப்பில், ”Preamble”என்று சொல்லக் கூடிய அடிப்படையில்இரண்டாவது வரியாக அவர்கள் குறிப்பிட்டிருப்பது, “The Education System which was evolved first in ancient India is known as Vedic system”. அதாவது பண்டைய இந்தியாவில் முதன்முதலில் வேதத்தின் அடிப்படையில்தான் கல்வி முறை இருந்தது. அதைத் தொடர்ந்து நான்காவது வரியாக அவர்கள் சொல்வது, “The Gurukul system fostered a bond between the Guru & the Shishya”,அதாவது குருகுலம் முறை குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே உறவை வளர்த்தது. ஆக இதைதான் நாம் இன்றைக்கு எதிர்க்க முற்பட்டிருக்கிறோம்.
 
இந்தியாவில் முதன்முதலில் 1968-ல் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கல்விக் கமிட்டியாக உருவாக்கப்பட்டது. டி.எஸ்.கோத்தாரி தலைமையில் அந்த கமிட்டி உருவானது. அதன்பிறகு 1986-ல் கல்விக் கொள்கை வெளியானது. 1992-ல் சில திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,இன்றைக்கு மோடி அவர்கள் தலைமையில் இருக்கக் கூடிய பிஜேபியுனுடைய மத்திய ஆட்சி சமூக நீதி,மதச்சார்பின்மைதமிழ்மொழி அனைத்திற்கும் சாவல் விடக் கூடிய வகையில்இந்த புதிய கல்விக் கொள்கையை புகுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை இந்த போராட்டத்தின் மூலமாக நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 
இங்கே அண்ணன் சுப.வீ அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள்ஐந்து பேர் கொண்ட ஒரு கமிட்டி,அதாவது மதிப்பிற்குரிய டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் அவர்கள் தலைமையிலே அமைந்திருக்கக் கூடிய கமிட்டி. அந்த கமிட்டியில் ஒருவர் தவிர மற்ற நான்கு பேர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அதுவும் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளா என்றால் அதுவும் கிடையாது. ஓய்வுப் பெற்றிருக்க கூடிய அதிகாரிகள். ஒரே ஒரு கல்வியாளர் யாரென்று கேட்டால், அவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஇந்த கமிட்டியிலே கல்வியாளர்கள் இல்லைஆசிரியர்களுடைய பிரதிநிதிகள் இல்லைமாணவர்களுடைய பிரதிநிதிகள் யாரும் இதிலே இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்று சொன்னால்அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்,குறிப்பிட்டிருக்கிறார்கள்கிராம பஞ்சாயத்துகள்,நகராட்சிகள்மாவட்டங்கள் என அனைத்து மட்டத்திலும் கருத்துகள் கேட்கப் பட்டிருப்பதாக ஒரு அபாண்டமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. யாரிடமும் கேட்கவில்லை. எந்த பயணமும் நடத்தவில்லை. மக்களிடத்திலே போய் ஒப்பினியன்’,அதாவது அவர்களுடைய கருத்துகளை கேட்டிருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.
 
ஆகவேஇந்திய அரசியல் சட்டத்திற்குபன்முகத் தன்மைக்கு எதிரான ஒரு ஆபத்து சமூகநீதிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாக, ”ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் என்பது போல இந்த நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.
 
நான் இன்னும் குறிப்பிட விரும்புகிறேன்,இந்தியாவை பொறுத்தவரையிலேபல மதங்கள்பல மொழிகள்பல கலாச்சாரங்கள்பல்வகை பண்பாடுகள் நிறைந்திருக்கக்கூடிய நாடுநம்முடைய இந்தியத் திருநாடு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான கல்விக் கொள்கை பொருந்தி வருமா என்று கேட்டால் நிச்சயமாக வராது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்களும் வேட்டி சட்டைதான் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியுமா முடியவே முடியாது. அதேபோல்,இந்தியாவில் இருக்கக் கூடிய எல்லா மாநிலத்தில் இருக்கக் கூடியவர்களும் ஒரே மாதிரியான உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்றுஅவர்களை வற்புறுத்த முடியுமா கட்டாயப் படுத்த முடியுமா ?அதற்காக ஒரு சட்டம் கொண்டுவர முடியுமா?முடியவே முடியாதுஅதுபோலவே இந்தியா முழுவதும் இருப்பவர்கள் ஒரே விதமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என எல்லா மாநிலத்திலும் இருக்கக் கூடியவர்கள் சாப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்து சொன்னால் அதனை  யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அவர்களை வற்புறுத்த முடியுமா கட்டாயப்படுத்த முடியுமா அதற்காக ஒரு சட்டம் கொண்டு வர முடியுமா அரிசி சோறுதான் எல்லா மாநிலத்தில் இருக்கக் கூடியவர்களும் சாப்பிட வேண்டுமென்று சொன்னால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா நான் அதைத்தான் இந்த போராட்டத்தின் மூலமாக உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
 
ஆகவேஇந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நிறைவேற்றிட முடியுமா என்றுக் கேட்டால் முடியாதுநான் இன்னொரு விஷயத்தை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்கடந்த 5-ஆம் தேதி நம்முடைய விடுதலை ஏட்டிலே ஒரு கடிதம் வந்ததுயார் என்று கேட்டால்சென்னையிலே சாந்தோம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய தங்கமணி என்ற ஒரு மாணவி எழுதியிருந்தார்அவர் ஒரு கடிதம் எழுதி அந்த கடிதம் விடுதலை பத்திரிகையில் வெளியிடப் பட்டிருக்கிறதுமுழுமையும் படிக்க நேரமில்லைஎனவே ஒன்று இரண்டு என சில குறிப்புகளை மட்டும் இங்கு குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.
 
அந்த மாணவி சொல்கிறார், ”இக்கொள்கையை பார்த்தால் எதிர்காலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி கற்பார்களா என அச்சம் எழுகின்றதுஅதேபோல வேதக் கல்வியையும்குருகுலக் கல்வி முறையையும் இலட்சிய கல்வியாக முன்னிறுத்துகிறதுபள்ளிகளை அருகில் உள்ள ஆசிரமங்களோடு தொடர்புபடுத்த முயல்கிறதுபத்தாம் வகுப்பில் மாணவர்களை இரண்டாம் தரம் பிடிக்க முயல்கிறதுகணிதம்,அறிவியல்ஆங்கிலம் இவற்றில் அதிகம் மதிப்பெண் பெறும் மாணவர்களை உயர் கல்விக்குறியவர்கள் எனவும்பின்தங்கும் மாணவர்களை தொழில் கல்விக்குறியவர்கள் எனவும் வேறுபடுத்தி இருபிரிவினருக்கும் இருவேறு தேர்வுகளை நடத்த முற்படுகிறதுஇது கிராமப்புற ஏழை மாணவர்களை வெகுவாக பாதிக்கும்மீண்டும் வரணாசிரம குலக்கல்விக்கும்குலத்தொழிலுக்கும் இது வழிகோலும்சமூக நீதி அக்கறை கொண்ட எவரும் இதனை ஏற்க மாட்டார்கள்”, என்று புனித ரபேல் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிற அந்த தங்கமணி என்கிற மாணவி வேதனையோடு எழுதிஅது விடுதலை ஏட்டிலும் வெளிவந்திருக்கிறது.
 
ஆகவேநான் மீண்டும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதுஒரு புதிய கொள்கையில் வகுத்து,அதன் மறைவாக இன்றைக்கு அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்மனிதவள மேம்பாட்டு துறை இணையதளத்தில் அதை வெளியிட்டு இருக்கிறார்கள்.அவற்றில் இருக்கக்கூடிய சில செய்திகளை நான் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்அதாவது,அவர்கள் சொல்லுகிறார்கள்,
§  அகில இந்திய கல்விப்பணி உருவாக்கப்பட வேண்டும்அதுவரை ஆசிரியர்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்வு செய்யப்பட்ட வேண்டும்.
§  ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பெயில் செய்யாமல் பாஸ் செய்ய வேண்டும்.
§  சிறுபான்மையினர் நடத்துகிற கல்வி நிறுவனங்களை கல்வி உரிமைச் சட்டப்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியிலே பின் தங்கியோருக்கு25 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.
§  உட்கட்டமைப்பு குறைவாகவும்மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும்.
§  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்க வேண்டும்.
§  மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
§  ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான கொள்கையை மத்திய அரசே வகுக்க வேண்டும்.
§  பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைபுதிதாக பொறுப்பேற்கும் ஆசிரியர்கள் 10ஆண்டுக்கு ஒருமுறையும் மத்திய அரசு நடத்தும் தேர்வை எழுதி லைசன்ஸ் பெற வேண்டும்.
§  ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களை படிப்படியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
§  அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வுஇன்கிரிமெண்ட் போன்றவற்றை தகுதியின் அடிப்படையில் கொடுக்க வேண்டும்.
§  கல்வி துறையில் பல முக்கிய அதிகாரிகளின் பதவிக்கு இந்திய கல்விப்பணி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்.
§  பள்ளிகளில்பள்ளிக் கல்வியில் இந்திய கலாச்சாரத்தை போதிக்க உரிய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
§  சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பள்ளிபல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்றுத்தர தாராளமான வசதிகளை செய்துதர வேண்டும்.
§  ஒரு பண்பட்ட சமுதாய அமைப்புக்கு Community organisations மூலம் ஓரிடத்தில் சத்துணவை சமைத்து அனைத்து பள்ளிகளுக்கும் சப்ளை செய்ய வேண்டும்.
§  200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
என்று இப்படி அந்த வரைவிலே அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
இதனால் வரக்கூடிய ஆபத்துகள் என்ன என்பதனை உணர்த்துவதற்காக தான் இந்த போராட்டம் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுஅந்த ஆபத்துகளில் ஒன்றுஇரண்டை நான் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
பாஜக அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையின்படி,
§  பதினான்கு வயது வரை இலவசக் கல்வி என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் பறிக்கப்படுகிறது.
§  சத்துணவு அமைப்பாளர்கள் பதவிகள் நீக்கப்படும் அபாயமும் உருவாகியிருக்கிறது.
§  தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது.
§  ஆசிரியர்கள் நியமன அதிகாரத்தை மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் கொடுமை உருவாக இருக்கிறது.
§  சிறுபான்மையினர் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சட்டத்தின்படியும்,உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்புபடியும் இருக்கக்கூடிய அந்த உரிமையும் பறிக்கப்படுகிறது.
§  பள்ளிகளை மூட புதிய கல்விக் கொள்கைகள் வித்திடுகிறது.
§  வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நுழைய அனுமதித்து இங்குள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு சதி திட்டம் தீட்டியிருக்கிறது.
§  தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு பாட நினைக்கிறது மத்திய அரசு.
§  உயர்கல்வியில் நுழைவுத் தேர்வை புகுத்துகிறது.
§  திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற முகமூடியப் போட்டு குலக்கல்வி திட்டம் தமிழகத்திலே குடியேற செய்வதற்கு மத்திய அரசு இன்றைக்கு முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது.
அதனால் தான் இன்றைக்கு நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடி நீதிக்காகநம்முடைய சமத்துவத்திற்காக போராடக் கூடிய வகையிலே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுஏற்கனவே இதுகுறித்து சட்டமன்றத்திலே விவாதிக்க வேண்டுமென்று கவன ஈர்ப்பு தீர்மானம் என்ற அடிப்படையிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாங்கள் எல்லாம் அங்கே சபாநாயகரிடத்தில்,பேரவைத் தலைவரிடத்திலே நாங்கள் விண்ணப்பித்து கடிதத்தை கொடுத்திருக்கிறோம்கொடுத்து இதுவரை ஒருவார காலம் ஆகியிருக்கிறதுஅதுவரை இந்த பிரச்சினையை இந்த அரசு கையில் எடுக்க முன்வரவில்லை.

நான் மீண்டும் சொல்கிறேன்இந்த போராட்டத்தின் மூலமாக சொல்கிறேன்தலைவர் கலைஞர் அவர்கள் அனுமதியோடு சொல்கிறேன்இந்தப் போராட்டத்தை தலைமையேற்று இருக்கிற ஐயா ஆசிரியர் அனுமதியோடு சொல்லுகிறேன் சட்டமன்றத்திலே எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதைக் கண்டிக்க தயாராக இருக்கிறதுஎனவே இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் சட்டமன்றத்திலே இதைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்று நான் இந்தப் போராட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஒருவேளை அதற்கு மனம் இல்லையென்று சொன்னால்திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய நாங்களே ஒரு தனி தீர்மானமாக கொண்டு வந்துஅதை எழுப்புவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.ஆகவே நான் இதுகுறித்து சட்டமன்றம் சென்றவுடன் உடனடியாக தனித் தீர்மானமாக கொண்டு வரகவன ஈர்ப்பு தீர்மானம் இதுவரை சட்டப்பேரவையில் எடுக்கப்படவில்லைஎனவே தனித் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று தலைவரின் அனுமதியோடு,ஆசிரியரின் அனுமதியோடு அந்தக் கடிதத்தை வழங்க இருக்கிறேன்.

உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்.இல்லையென்றால்ஐயா ஆசிரியர் அவர்கள் சொன்னது போலமற்றவர்களெலாம் எடுத்துச் சொன்னது போலமீண்டும் தமிழகத்தில் 1938, 1939மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டம் போல மீண்டும் தமிழகத்தில் ஒரு போராட்டம் உருவாகும் என்பதை மிகுந்த எச்சரிக்கையோடு தெரிவிக்கிறேன் என்றார்.

 

No comments:

Post a Comment


Labels